யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதி தீவிர சிசு பராமரிப்பு சிகிச்சை பிரிவை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று திறந்துவைத்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தலமையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த சிசு அதி தீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தார்.

இச் சிகிச்சை பிரிவானது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளினுள் மிகப் பெரிய கட்டட வசதிகளுடன் கூடிய தாய்மார்களும், தங்கியிருக்க கூடிய அதி சொகுசு சேவைகளை கொண்ட கட்டடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.