அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில், அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில், இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (14), சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவர் மேலும் கூறியதாவது:
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம், இம்மாதம் வர்த்தமானியில் வெளியடப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆளும், எதிர்கட்சிகள் இது தொடர்பில் பல கருத்துக்களை முன்வைத்தன.
இது சிறந்த விடயமாகும்.
இது ஜனநாயக சமூகத்திற்கு அவசியமான அடையாளமாகும்.
இந்த அரசாங்கம், அனைத்து சந்தர்ப்பங்களிலும்; மக்களின் கருத்துக்களுக்களுக்கு மதிப்பளித்தே, இறுதி தீர்மானம் எடுக்கும்;.
விசேட விதமான அரசியலமைப்பு தொடர்பான விடயத்திலும், இவ்வாறாகவே செயற்படும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்த அரசியலமைப்பு தொடர்பில், இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார்.
அந்த குழுவின் தலைவராக நான் செயலாற்றுகின்றேன்.
அதன் ஏனைய அங்கத்தவர்களான அமைச்சர் அலிசப்ரி, நிமல் சிறிபாலடிசில்வா, உதய பம்மன்பில விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, வியாளேந்திரன், பிரேம்லாத் தொலவத்த உள்ளிட்ட ஒன்பது பேர் உள்ளடங்குகின்றனர்.
இந்த குழு கூட்டம் நேற்று (14) மாலை இடம் பெற்றது.
இந்த கூட்டத்தில் 20 ஆவது திருத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் ஒவ்வொன்றாக ஆராய்துள்ளோம்.
அதனைதொடர்ந்து எமது ஆய்வு அறிக்கை நாளை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்.
தொடர்ந்து புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்போம்.
இதனையடுத்தே இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
என குறிப்பிட்டுள்ளார்.