25 C
Colombo
Sunday, November 27, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமரர் முத்து சிவலிங்கத்தின் பூதவுடல், இன்று தகனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான அமரர் முத்து சிவலிங்கத்தின் பூதவுடல், இன்று தகனம் செய்யப்பட்டது. அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன், இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டன.
இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் இரங்கல் செய்திகள் வாசிக்கப்பட்டன.
மூத்த அரசியல் – தொழிற்சங்க வாதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல், நுவரெலியாவில் உள்ள இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இன்று இல்லத்தில் இருந்து, நுவரெலியா நகர் வழியே எடுத்து செல்லப்பட்டு, நுவரெலியாவில் உள்ள கட்சி காரியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நுவரெலியா பொது மயானத்தில், இன்று மாலை 5.30 மணியளவில், தகனம் செய்யப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ராமேஷ்வரன் உள்ளிட்டோர், கட்சி கொடியை போர்த்தி கௌரவம் அளித்தனர்.
இந்திய தூதரக அதிகாரிகளும், இல்லத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தி, இரங்கல் புத்தகத்தில், குறிப்பை பதிவு செய்தனர்.
நேற்று முதல், பெருந்திரளான மக்கள் திரண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இறுதி நிகழ்வில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Related Articles

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் நீர்வேலியில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த...

அரச சேவையாளர்களுக்கான இலகு ஆடைத்திட்ட சுற்றறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு!

அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் நீர்வேலியில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த...

அரச சேவையாளர்களுக்கான இலகு ஆடைத்திட்ட சுற்றறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு!

அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்...

டீசல் தொகையுடன் கொழும்பு வந்த சீனக் கப்பல்!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள ஒரு தொகை டீசலுடன் கூடிய ´சூப்பர் ஈஸ்டர்ன்´ எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.மாதிரி பரிசோதனைக்கு பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இறக்கும்...

கல்முனை பிரதேச தொலைத்தொடர்புநிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. அரசாங்கத்திற்;கு வருமானத்தை...