28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமானா வங்கியின் OrphanCare இனால், 2700 க்கும் அதிகமான அநாதரவானவர்கள் பயன் பெற்றுள்ளனர்

அமானா வங்கியின் சர்வதேச ரீதியில் விருது வென்ற சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான OrphanCare ஊடாக, 2020 ஜுலை மாதத்தில் 2700 க்கும் அதிகமான அனாதரவானவர்களுக்கு நிதி வழங்கல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனூடாக, 2019 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் நான்கு சுற்று நிதி வழங்கல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அநாதரவான சிறுவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், சுயாதீன நம்பிக்கை நிதியமாக OrphanCare ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு அனாதரவான சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்ததும், பராமரிப்பு நிலையங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழலில், அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

“இரண்டாம் கைதுறப்பு” என யுனிசெப் அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சனை, அநாதரவானவர்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவாலாக அமைந்துள்ளது. தமது வாழ்வில் குழந்தைப் பருவத்தின் போது எதிர்நோக்கியிருந்த இந்த சிறுவர்கள், பராமரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் பருவத்தை எய்தியதும் இச் சவாலுக்கு முகங்கொடுக்கின்றனர். அவர்களுக்கு காணப்படும் முக்கிய பிரச்சனையான நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வங்கி OrphanCare நிதியத்தை நிறுவியது. குறித்த அநாதரவான சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரையில், அவர்களுக்கான கணக்கில் குறிப்பிட்ட தொகையை இந்த நம்பிக்கை நிதியம் வைப்புச் செய்யும். அவர்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் போது, அந்தப் பணத்தை அவர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அதன் மூலம் பயன்; பெறுவோரை சென்றடைவதை வங்கி உறுதி செய்கின்றது. ஏனெனில் இந்த நிதியத்தை நிர்வகிக்கும் சகல நிர்வாக மற்றும் நடப்புச் செலவுகளையும் வங்கி ஏற்றுள்ளது. OrphanCare இன் தலைமை அதிகாரி அசாட் சஹீட் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் எழுந்த சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும், இச் நம்பிக்கை நிதியத்திலிருந்து பயன் பெறுநர்களுக்காக கணக்குளளகளில் நான்காவது முறையாகவும் எம்மால் பணத்தை வைப்புச் செய்ய முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த சிறந்த மனிதநேயத் திட்டத்தில் அங்கம் வகிப்பதையிட்டு உண்மையில் நான் திருப்தி கொள்வதுடன், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு வழங்கும்; சகல நம்பிக்கை காப்பாளர்களுக்கும், நன்கொடை வழங்குநர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

நாட்டில் 14,000க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட அனாதரவானவர்கள் உள்ள நிலையில், OrphanCare ஊடாக இதுவரையில் 2700க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதையும் சேர்ந்த 79 அநாதை இல்லங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெறுகின்றனர். இந்தத் திட்டம், நாட்டின் சகல அநாதரவானவர்களையும் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அநாதரவானவர்களை தெரிவு செய்யும் போது, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் இரண்டாம் தீர்மானமான சிறுவர்களினது அல்லது அவர்களின் பெற்றோர்களினது அல்லது அவர்களின் பாதுகாவலரின் நிறம், இனம், பாலினம், மொழி, மதம், அரசியல், தேசிய, இன அல்லது சமூக பின்புலம், சொத்துகள், அங்கவீனம் அல்லது பிறப்பு போன்ற எவ்வித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

OrphanCare நிதியத்தின் நம்பிக்கை காப்பாளர்களாக சமூக சேவையில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட அணியினர் செயற்படுகின்றனர். நிதியத்தின் தவிசாளராக ருஸ்லி ஹுசைன் (இலங்கை Roteract அமைப்பின் ஸ்தாபகர்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கியின் ஸ்தாபகர்), கே. ஆர். ரவிந்திரன் (ரொட்டரி கழகத்தின் பணிப்பாளர் சபை தவிசாளரும், ரொட்டரி இன்டர்நஷனலின் முன்னாள் தலைவர்), ரொஹான் துடாவே பொருளாளர் (துடாவே பிரதர்ஸ் தவிசாளர்), ஷராத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), தையிப் அக்பரலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி), ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (AAT முன்னாள் தலைவர்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் அடங்குகின்றனர். நிதியத்தின் நீண்ட கால நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் அதியுச்ச நேர்மைத்தன்மையை பேணுவதற்காகவும் அதற்கான ஒரு உறுதியான நிர்வாகக் கட்டமைப்பை காப்பாளர்கள் நிறுவியுள்ளனர்.

சஹீட் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அனாதரவான சிறுவர் ஒருவரின் எதிர்காலத்துக்கு வளமூட்ட எதிர்பார்க்க நினைக்கும் அனைவரையும் இந்தத் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் OrphanCare தொடர்பான தகவல்களை www.amanabank.lk/orphan-care எனும் இணையத்தளத்தினூடாக அல்லது 011 775 6 775 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும், www.bit.ly/orphan-care-video இல் காணப்படும். ‘From Chance to Choice’ எனும் கதையை பார்வையிடுமாறும் நாம் அனைவரையும் அழைக்கின்றோம்.

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...