அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும்
21ம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
குவாட் அமைப்பின் மாநாடு முன்னதாக இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள்
பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் செல்லவுள்ள நிலையில், மாநாட்டை அமெரிக்காவில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டன்னில் மாநாடு நடைபெறவுள்ளது.