அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த பகுதி அருகே 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நுழைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளார்.
இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.