அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றை பெற விரும்பும் பிரித்தானியா!

0
6

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் எளிதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கருத்துரைத்த பிரித்தானிய வணிக மற்றும் வர்த்தக அமைச்சர்,அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வரிகளை விரும்பவில்லை எனவும், அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.