அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயற்படுவோம் : இந்தியாவுக்கு சீனா அழைப்பு!

0
15

அமெரிக்க ஜனாதிபதியாக  ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியா, சீனா, உட்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக வரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 26சதவீத வரி விதித்துள்ளார். அதேபோல், சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே 54 சதவீத கூடுதல் வரியை ட்ரம்ப் விதித்தார். தற்போது சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்துள்ளார். இதன் மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி 104 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 இதனால், உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நவடிக்கைக்கு பதிலடியாக சீனா 34 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

 இது தொடர்பாக சீன தூதரக செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சீனா-இந்தியா பொருளாதார, வர்த்தக உறவு இருதரப்பு நன்மைகளை அடிப்படையாக கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் இரு வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயற்பட்டு இந்த கடினமான சூழ்நிலையைக் கடக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்………