அமெரிக்காவின் வெளியுறவு செயலாளராக மார்கோ ரூபியோ நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த பதவி குறித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கும் அதே வேளையில்இ நியமனம் இறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இன்னும் உயர்மட்ட இராஜதந்திர நிலை குறித்து தமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றிவரும் மார்கோ ரூபியோ வெளிநாட்டு உறவுகள் குழுவிலும் அங்கம் வகித்து வருகிறார்.