அமைச்சர்கள் இருவரில் ”நீதிக்கு ’ஜம்பர்’: குரங்கு சிறை!”

0
4

நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள்  ‘ஜம்பர்’  (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி.  சாமர சம்பத் தசநாயக்க,  குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குரங்கு கணக்கெடுப்புக்கு 100 இலட்சம்  ரூபாவை  செலவழித்துள்ள குரங்கு அமைச்சர், குரங்குகளுக்கு ஒரு மாம்பழம்  கூட வழங்கவில்லை. குரங்குகளின் எண்ணிக்கையும் வெளிவரவில்லை. ஆகவே குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த நீதியமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன், போலி கலாநிதி பட்டம் சமர்ப்பித்த முன்னாள் சபாநாயகருக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் எனவும்   கேட்டுக்கொண்டார்.  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) அன்று நடைபெற்ற   விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.  

நீதியமைச்சர் பொது இடங்களில் கருத்து தெரிவிக்கும் போது நீதிமன்றத்துக்கு மதிப்பளித்துப்  பேச வேண்டும் நீதியமைச்சர் முதலில் பாராளுமன்ற  சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைக்  கற்றுக்கொள்ள வேண்டும். பிறிதொரு  உறுப்பினர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு உரையாற்ற முடியாது. முதலில்  முறைகளை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

இந்த நீதியமைச்சர் போலியான பத்திரங்களை சமர்ப்பித்து கலாநிதி பட்டத்தைத் தனது பெயருக்கு முன்னாள் வைத்துக் கொண்டார். உண்மை வெளிவந்ததன் பின்னர் பட்டத்தை நீக்கிக் கொண்டார்.  தற்போது நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். இவருக்கு நிச்சயம்  என்றோ ஒருநாள்  ஜம்பர் (கைதி உடை) அணிவிப்பேன்.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு எதிராகவே அமைகிறது. ‘பிரய்பரி சரணம் கச்சாமி’ என்று துதி பாடும் நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.  இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை பிடித்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. இலஞ்ச ஆணைக்குழுவும் அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல செயற்படுகிறது. எத்தனை நாட்களுக்கு  இவ்வாறு செயற்பட முடியும் என்று பார்ப்போம் என்றார்.