அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.
நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இவ் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்களுடன் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.