மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைக் கால்நடைப் பண்ணையாளர்களின், மேய்ச்சல் தரைக்கான போராட்டம்,
இன்றோடு 300வது நாளை எட்டியது.
300 நாட்களைக் கடந்தும், தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை என தெரிவித்து, பண்ணையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
பி2பி மக்கள் எழுச்சி இயக்க செயற்பாட்டாளர்களான வேலன் சுவாமி, எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை ஜெகதாஸ்,அருட்தந்தை லூத் உட்பட பலரும் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 300வது நாளை எட்டியது