அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாக
சபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.
அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ ஆப்
பிராத்தனையும், ஊர்வலமும் நடைபெற்றது.
நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையினர், மத்திரசா மாணவர்கள், கல்விமான்கள் பொது மக்கள், மௌலவிமார்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன், தனவந்தர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.