அம்பாறை திருக்கோவில் பிரதேசம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பிரதேச அனர்த்த முகாமைத்துவக்குழு, நேற்று மாலை ஒன்றுகூடி ஆராய்ந்தது.
பிரதேச அனர்தத் முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜின் ஒழுங்கமைப்பில், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்
கூட்டம் நடைபெற்றது.
தாழ்நிலப்பிரதேசங்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றுதல், உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், போக்குவரத்திற்குத் தடையாகவுள்ள வீதிகளில் முறிந்து வீழ்ந்துள்ள மரங்களை வெட்டிகயற்றுதல், இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கான குடிநீர் மற்றும் உணவு வசதிகளை வழங்குதல், உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதார அதிகாரிகள், திருக்கோவில் பிரதேசசபை செயலாளர், இரானுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.