அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0
20

அம்பாறை கல்முனை பிராந்திய திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, திருக்கோவில் பிரதேசத்தில் இன்று டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்பணர்வு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக இராணுவம், பொலிசார், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன ஒன்றினைந்து இன்று காலை திருக்கோவில் 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தனர்.

இதன்போது வீடுகள் வெற்றுக் காணிகள் மற்றும் வடிகான்கள் என்பன பார்வையிடப்பட்டு துப்பரவு பணிகளும்
முன்னெடுக்கப்பட்டன. டெங்கு அபாயம் ஏற்படக்கூடிய வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, டெங்கு நோய் ஏற்படக்கூடிய வெற்றுக் காணிகளின் உரிமையாளர்களுக்கும் சிவப்பு நோட்டீஸ் வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன