அரசமைப்பு பேரவை முதல் தடவையாக நாளை கூடுகின்றது என பதவியணி தலைமை அதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். அரசமைப்பு பேரவைக்கு நீண்ட இழுபறியாக இருந்த சிவில் உறுப்பினர்களின் நியமனம் சபாநாயகர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. இதன்படி, கலாநிதி பிரதாப் இராமானுஜம், மருத்துவர் தில்குஷி அனுலா விஜயசுந்தர, கலாநிதி வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோர் அரசமைப்பு பேரவை உறுப்பினர்களாகினர். இந்த நிலையிலேயே அரசமைப்பு பேரவையின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ளது. அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அரசமைப்பு பேரவை அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரச சேவையில் அரசியல் தலையிடுகளை தவிர்த்து சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.