அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக பங்கிடுகின்றனர் : அதிகாரியின் அலுவலகத்திலிருந்து 4.1 மில்லியன் ரூபா  மீட்பு – இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு!

0
9

பல அரச நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

பல அரசநிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றன என ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அரச திணைக்களங்களில் உள்ள அனேக நபர்களின் ஆதரவுடனேயே இது இடம்பெறுகின்றது என இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இலஞ்சமாக பெற்றுக்கொண்ட பணத்தை இலஞ்சம் பெறுவதுடன் தொடர்புபட்ட அந்த திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் விசேட சோதனையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்று நாங்கள் சோதனையிட்ட வேளை அதிகாரியொருவரின் அலுவலகத்தில் 4.1 மில்லியன் ரூபாய்களை மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.