அஹூங்கல்ல கடலில் நீராடச்சென்ற
வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு :
இரண்டு சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர்.

0
23

அஹூங்கல்ல கடலில் நீராடச்சென்ற வெளிநாட்டு பிரஜைகள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

54 வயதான உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவரே பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை இரண்டு சிறுமிகளுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்த இரண்டு சிறுமிகளும் 13 மற்றும் 17 வயதுடைய உக்ரேனியர்களாவார்.

உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அஹூங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.