இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.இலங்கையில் சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த கடனுதவியை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கையின் 10 நிதி நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.