சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இதன் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்தது பாகிஸ்தான் இரண்டாம் இடமும், தென்கொரியா மூன்றாம் இடமும், சீனா நான்காம் இடத்தையும் பிடித்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதிய இரண்டாவது அரை இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 4 கோல்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். மிகக் கடுமையாக போராடியும் தென்கொரிய அணியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி சீனாவை எதிர்கொள்ள உள்ளது.