பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான திட்டம் தற்பொழுது வகுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற அமர்வின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பிதிலளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலான விடயங்களை முன்வைத்து வாய் மூலமாக கேள்வி கேட்டார்.