30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல்
அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸதை; தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்ப்பாண முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை, இவ்விடைக்கால அறிக்கையின் ஊடாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் அமுல்படுத்துவது தொடர்பான மூன்று முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளது.
இச்சட்டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாகத் தடுத்து வைத்தல் நடவடிக்கைகளைச் செயற்படுத்தும்போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து வழக்குகளை விசாரணை செய்து முடிப்பது குறித்தும்
11ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.

13ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆலோசனைக் சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையின்
ஊடாக முன்மொழிந்துள்ளது.
நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர் நிறுவனங்களோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கையாகும். தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினைகளை ஜனநாயக மற்றும் சட்ட செயன்முறைக்குள் தீர்ப்பதற்கும் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கும் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் டி.டி. உப்புல்மலி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காமினிபுர,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காமினிபுர,...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினமடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒரவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே...

பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி தங்கநகை திருட்டில் ஈடுபட்ட 24 வயது பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.