இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் எண்மர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து சம்பவத்தில் எழுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.