ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் நடாத்தப்பட்ட தற்கொலைக்; குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.13 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் காபூல் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.