31 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘ஆப்பிள் ஒன்’ புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் ஒன்’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம், டைம் ஃப்ளைஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமாக பொது மேடையில் நடக்கும் புதிய கருவிகளின் அறிமுக நிகழ்ச்சி இம்முறை இணையம் மூலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதிய ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிளின் புதிய சேவையான ஃபிட்னஸ்+ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘ஆப்பிள் ஒன்’. இந்த ஒரே திட்டத்தின் மூலம் ஆப்பிள் மியூஸிக், ஆப்பிள் டிவி+, ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ் +, ஆப்பிள் ஃபிட்னஸ்+ மற்றும் ஐக்ளவுட் ஆகிய சேவைகளைச் சந்தா செலுத்திப் பெற முடியும்.

இந்த ஒரே சந்தா மூலம், ஐபோன், ஐபேட், ஐபாட் டச், ஆப்பிள் டிவி மற்றும் மேக் ஆகிய கருவிகளில் பயனர்கள் ஆப்பிள் சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்த வசதி 100க்கும் அதிகமான நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில், ஆப்பிள் சந்தாதாரர்களுக்கு, சரியான ஆப்பிள் ஒன் திட்டம் என்ன என்பது பரிந்துரைக்கப்படும். எந்த ஆப்பிள் கருவியிலிருந்து அவர்கள் அதை வைத்து சந்தா செலுத்தி, குறைந்த கட்டணத்துக்கு அதிக சேவைகளைப் பெறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் தனி நபர் திட்டமாக, ஆப்பிள் மியூஸிக், ஆப்பிள் டிவி+, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் 50ஜிபி ஐக்ளவுட் ஸ்டோரேஜ் ஆகியவை மாதம் ரூ.195க்குக் கிடைக்கும்.

குடும்பத்துக்கான திட்டமாக, தனிநபர் திட்டத்தின் சேவைகளோடு 200 ஜிபி ஐக்ளவுட் ஸ்டோரேஜ் வசதி மாடம் ரூ.365க்குக் கிடைக்கும். இதை 6 பேர் வரை பகிர்ந்து பயன்படுத்தலாம்.

இதில் ப்ரீமியர் என்கிற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும். இதில் ஆப்பிள் மியூஸி, ஆப்பிள் டிவி+, ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ்+, ஆப்பிள் ஃபிட்னஸ்+ மற்றும் 2டிபி ஐக்ளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். 6 பேர் வரை பயன்படுத்தலாம்.

30 நாள் வரை இலவசமாக இந்தச் சேவைகளை முன்னோட்டம் பார்க்கும் வசதியும் உள்ளது.

Related Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...