32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு மாகாண சுற்றுலா அலுவலக  நியதிச் சட்டம் மற்றும் வாழ்வாதார முகாமைத்துவ  நியதிச்
சட்டங்கள் என இரு நியதிச் சட்டங்களை வெளியீடு செய்து வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார்.

அவ்வாறு ஆளுநரால் நியதிச் சட்ட உருவாக்கம் செய்தமை சட்ட முரணனானது என வடக்கு மாகாண அவைத் தலைவர. சி.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன ஊடாக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இருந்தபோதும் இதனை சட்டமா அதிபர் சார்பில் தெரிவித்தாளும் இவற்றை எழுத்தில் சமர்ப்பித்து நீதிமன்ற அனுமதியுடனேயே கட்டளை ஆக்குமாறு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சார்பில் கோரியதற்கமைய அதற்கு நியதிச் சட்டத்தை இரத்துச் செய்து நீதிமன்றிறகு அறிவிக்க  சந்தர்ப்பம் அளித்து மே மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வாறு தாக்கல் செய்த வழக்கில் 2022-10-27 அன்று வடக்கு ஆளுநரால்  வெளியிட்ட வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க  நியதிச் சட்டம் மற்றும் 2ஆம் இலக்க சற்றுலா அலுவலக நியதிச் சட்டம் தொடர்பிலேயே சட்டமா அதிபர் சார்பில் மேற்கண்டவாறு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்யலாம எனக் கோரப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles