இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்துவந்தவர்களை தாங்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்டிக்ஸ் நிருவாகம் விசேட விமானங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவந்தவர்களை எங்களின் உறுப்பினர் எவரும் கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட எவரும் 14 நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்டவர்கள் அரசாங்கம்அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என பிரன்டிக்சும் கொவிட் தொடர்பான செயலணியும் தெரிவித்துள்ளதை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய நிராகரித்துள்ளார்.
அவர்களை தனிமைப்படுத்தியிருந்தால் அதனை கண்காணிக்கும் நடவடிக்கையை எங்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பானவர்கள், இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் 28 நாள்தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டனர் எனதெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ள பாலசூரிய அவர்கள் எங்கு கட்டாய தனிமைப்படுத்தலிற்கு தங்களை உட்படுத்தினார்கள் என்பதையும்,யார் அங்கு காணப்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் என்பதையும்,14 நாள் தனிமைப்படுத்தலை கண்காணித்த பொது சுகாதார பரிசோதகர்கள் யார் என்பதையும் பகிரங்கப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.