இந்தியாவில் ஒரே நாளில் 73,272 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்றியுள்ளது, இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.
59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நலமடைந்தோர் விகிதம் 85.81% ஆக உள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 926 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்த பலி எண்ணிக்கை இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 2வது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் குறைவாக 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 ஆக உள்ளது. இது மொத்த கரோனா எண்ணிக்கையில் 12.65% ஆக உள்ளது.
அதே போல் கோவிட்-19 பலி விகிதம் 1.54% ஆக உள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி வாக்கில் 20 லட்சம் பாதிப்பைக் கடந்த க்ரோனா வைரஸ் செப்.28ம் தேதி வாக்கில் 60 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுவரை 8 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 698 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 11 லட்சத்து 64 ஆயிரத்து 18 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
நேற்று பலியான 926 பேரில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 320 பெரும், கர்நாடகாவில் 114 பேரும், தமிழ்நாட்டில் 68 பேரும், மேற்கு வங்கத்தில் 62 பேரும் உ.பி.யில் 48 பேரும் டெல்லியில் 39 பேரும், சத்திஸ்கரில் 38 பேரும், பஞ்சாபில் 32 பேரும், ஆந்திராவில் 31 பேரும் பலியாகியுள்ளனர்.
மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 மரணங்களில் மகாராஷ்டிரா 39,472 மரணங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 10,120 பேர் மரணமடைந்துள்ளனர். 3ம் இடத்தில் கர்நாடகா 9,789 மரணங்களுடன் உள்ளது. உ.பி.யில் 6,293, ஆந்திராவில் 6,159 பேர், டெல்லியில் 5,692, மேற்கு வங்கத்தில் 5,501, பஞ்சாபில் 3,773, குஜராத்தில் 3,547 பேரும் மரணமடைந்துள்ளனர்.