இந்திய அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

0
9

ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் டேரல் மிட்செல் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தநிலையில் இந்திய அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.