இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கை வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் திருகோணமலைக்கும் செல்வார் என தெரிய வருகின்றது.
திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை ஜெய்சங்கர் ஆய்வு செய்வார். அத்துடன், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.