28 C
Colombo
Friday, July 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

தொலைபேசி அழைப்பில் வருகின்ற ஒவ்வொருவரும் கேட்கின்ற கேள்வி ஒன்றுதான். ‘அந்த டாக்டரின் வீடி யோவை (காணொலி) பார்த்தீர ;களா? என்னதான் நடக்கின்றது யாழ்ப்பாணத்தில்?’. டாக்டர் ஏதோ செய்ய நினைக்கின்றார், அதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள் என் பதுதான் அந்த காணொலியை பார்க்கின்ற ஒவ்வொருவர் மனதி லும் ஏற்படும். ஆனால், அதில் யார் சரி, யார் பிழை என்பதை யெல்லாம் ஆராய்ச்சி செய்ய இந்த ஊர்க்குருவி இன்னமும் முயற்சி செய்யவில்லை.

ஓர் ஒழுங்கையினுடாக பிரதான வீதியை அடையும் மோட்டார் சைக்கிள் செலுத்து நர், பிரதான வீதியில் ஏறி தான் போகவேண்டிய பக்கத்துக்கு எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி போய்க்கொண்டிருப்பார். பிரதான வீதியால் வந்துகொண் டிருக்கின்ற வாகன சாரதிகள் தான், ஒழுங்கையூடாக யாராவது வருகிறார்களா என்று பார்த்துப் போகவேண்டும். யுத்தம் நடந்துகொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் சில நூறு வாகனங்களே இருந்தன. அப்போது ஓடிப்பழகியவர்கள், யுத்தம் முடிந்த பல வருடங்களின் பின்னரும், பல இலட்சம் வாக னங்கள் ஓடித்திரிகின்றபோதும் பழைய ஞாபகத்திலேயே இப் போதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இதுபோலத்தான், ஒவ்வொரு துறையும். அவை சரியோ பிழையோ பழக்கப்பட்டுவிட் டன. அது பிழையானதாக இருந் தாலும் அதனை எடுத்த எடுப்பில் மாற்றியமைத்துவிட முடியாது. டாக்டர் செய்ய நினைப்பது நல்ல காரியமாக இருக்கலாம். ஆனால், அவர் அதனை செய்வ தற்கும் சில வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.

நான் சொல்வது சட்டத்திலோ அல்லது திணைக்களங்களின் ‘சேர்க்குலர்’களிலோ இருப்பதை அப்படியே ஒரேநாளில் செய்து விட முடியாது என்பதே. இதே வேளை, காணொலி பதிவின் மூலம் இந்தப் பிரச்னையை பொதுவெளிக்கு எடுத்துவர அந்த டாக்டர் முயன்றதும் – மக்கள் மத்தியில் தனக்கு அனுதாபத்தை திரட்ட முயன்றதும் – சற்று அவசரப்பட்டுவிட்டாரோ என்று யோசிக்க வைக்கின்றது.

மருத்துவத்துறையில் நிர்வாக கல்வியையும் கற்ற ஒரு டாக்ட ருக்கு இவை தெரியாததாக இருக் காது. இந்த விடயத்தை அறிந்ததும், சாவகச்சேரியை சேர்ந்த ஒரு நண் பரிடம் கேட்டேன், ‘உங்கள் ஊரில் என்னதான் நடக்கின்றது?’ என்று. அதற்கு அவர் ஒரு குட்டிக் கதை ஒன்றை மட்டும் பதிலாக அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிவைத்த கதைதான் இது. அது ஒரு முதலை குளம். மிகவும் அமைதியாகவே இருந்தது. அவ்வப்போது நீர்அருந்த வரும் விலங்குகளை திடீரென பாய்ந்து விழுங்கிய பின்னர் ஆழத்துக்கு சென்றுவிடும் முதலைகளும், அமைதியாகும் குளமும் தொடர்ந்தபடியே இருந்தன.

இந்த அநியாயங்களை அவதானித்து வந்த குரங்கு குட்டி ஒன்று அந்த குளத்தின் அபாயத் தையும் உயிர்கொல்லும் முதலைகளையும் வெளிக்கொணர விரும்பி அருகில் இருந்த ஆல மரத்து விழுதுகளை பிடித்து குளத்தின் தண்ணீருக்கு மேலே ஆடத்தொடங்கியது. குளத்தின் அத்தனை முதலை களும் மூக்கை நீருக்கு வெளியே நீட்டி குரங்குக்குட்டியை கவ்வு வதற்காக மேலே வந்தன.

சில முதலைகள் துள்ளிக்குதித்தும் ஆரவாரம் செய்தன. இப்போது குளத்தை சுற்றி அனைத்து விலங்குகளும் கூடி விட்டன. ஒரே ஆரவாரம். விழுது களில் தொங்கியபடி குரங்கும், துள்ளிக்குதித்தபடி முதலைகளும் வேடிக்கை பார்த்து விமர்சித்தபடி சுற்றிநின்ற மிருகங்களுமாக குளத்தடியில் ஒரே ஆரவாரம்.

குரங்குக்கு எதற்கு வேண்டாத வேலை என சிலதும் இத்தனை பெருத்த முதலைகள் இத்தனை நாளும் என்ன என்னத்தை எல்லாம் விழுங்கித் தொலைத் திருக்குமோ என்று சிலதும் மாறி மாறி பேசிக்கொண்டன. சிங்கம், புலி, யானை என எல்லா விலங்கு களும் முதலைகளை பார்த்தபின் பும் எந்த மிருகமும் முதலைகளை அழிக்க முன்வரவில்லை. கார ணம், தண்ணீரில் முதலைகளின் பலத்தை உணர்ந்ததாலோ என்னவோ..!

இப்போது குரங்கு குட்டியின் நிலையும் கவலைக்கிடம். தொங்கிய விழுதில் பிடித்திருத்த கைகள் வலிக்க, பாய்ந்த முதலை ஒன்றின் பல்லில் வால் சிக்க பரிதாப நிலையில். குளத்தின் ஆபத்தை உலகுக்கு உணர்த்த முயற்சித்த குரங்குக் குட்டிக்கு உயிரைத் தியாகம் செய்யவேண்டிய நிலை.

தொடரும் காட்சியில் ஏதோ ஒரு முதலைக்கோ அல்லது முத லைகளுக்கோ இரையாகிப் போக, முதலைகள் மீண்டும் ஆழம் சென்று உரு மறைந்துக் கொள் ளும். குளமும் அமைதி யாகும். மிருகங்கள் பாவம் நல்ல குரங்குக் குட்டி அநியாயமாக செத்துவிட் டதே என்று சிலதும் – பயங்கரமான முதலைகள் என்று சிலதும் பேசிக் கொண்டு கலைந்து செல்லும்.

கொஞ்ச நாளைக்கு தாகம் எடுத்தாலும் தண்ணிகுடிக்க குளத் துக்கு போவதை தவிர்க்கும். நாட்கள் நகர எல்லாம் மறந்து போகும். ஆனால், குளம் தேடி வரும் மிருகங்களை குதற குதற கடித்துவிழுங்க தொடர்ந்தும் குளத்தின் அடியில் காத்திருக்கும் முதலைகள். குட்டிகளையும் போட்டு குடும்பமாக. இந்த முதலைக்குளம் சாவகச் சேரியில் இல்லை. இதுவே நண்பர் அனுப்பி வைத்த குட்டிக்கதை. இதில் முதலைகள் யார், குரங் குக் குட்டி எது என்பதையெல் லாம் கண்டுபிடிக்கின்ற வேலையை வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

– ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles