கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மூன்று, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்றும் எனினும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.