இரா. பார்த்திபனின் ‘டீன்ஸ்’ பட கிறுக்கல்கள்

0
80

நடிகர் – இயக்குநர் – தயாரிப்பாளர் – கவிஞர்-  பாடலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட இரா. பார்த்திபன் இயக்கத்தில் தயாராகி எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் ‘டீன்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இக்கி பிக்கி.. ‘எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் இரா பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் வளரிளம் பருவத்தினை சார்ந்த எட்டு ஆண்களும், ஐந்து பெண்களும் கதையின் நாயகர்களாக அறிமுகமாகி நடித்திருக்கிறார்கள். கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

சாகச பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பயாஸ்கோப் யு எஸ் ஏ மற்றும் அகிரா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கால்டுவெல் வேள்நம்பி, டொக்டர் பாலசுவாமிநாதன், டொக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இரா. பார்த்திபன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படத்தில் இடம்பெற்ற ‘ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம்…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியரும், கவிஞரும், இயக்குநருமான இரா. பார்த்திபன் எழுத, பின்னணி பாடகி சுனிதா சாரதி மற்றும் பின்னணி பாடகர் கிறிஸ்டோபர் ஸ்டான்லி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். வளரிளம் பருவத்தினருக்கே உரிய வகையில் இப்படத்தின் பாடல் இருப்பதால் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.