இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு வரி : டிரம்ப் அதிரடி!

0
14

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, 

அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும்.

இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.