24 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்!

இலங்கையில் காணப்படுகின்ற 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக இலங்கையின் உயிர் பல்வகைமை செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியாக 244 வகையான பறவைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் இத் தகவலை வெளியிட்டுள்ளார். அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள் விலங்குகளை பதிவு செய்யும் ஆவணத்தின் தரவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் தெரிவித்துள்ளார். இலங்கை 435 வகையான பறவையினங்களைக் கொண்ட உயிர்ப் பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடமாக காணப்படுகின்றது. மனிதர்களால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அழிவடையும் நிலையிலுள்ள பறவை இனங்களை பாதுகாப்பதை முழு சமூகமும் பொறுப்பேற்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.