இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முக்கியமான இரண்டு தேர்தல்களின் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் சீனாவின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த உடன்படிக்கையினூடாக இலங்கை சந்தையைச் சீனா தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், இதனால் தமது நாட்டுக்கு எந்தவித அனுகூலமும் கிடைக்கப்போவதில்லை எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.