நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை மைதானத்தில் நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷித் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் நிலையில், இரண்டாவது போட்டியானது 26ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு இவ்வாறு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.