ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு, வவுனியா வடக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
வவுனியா வடக்கு கனகராஜன் குள கிராம மக்களால், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கனகராஜன் குளம் குருசுட்ட குள கிராம பொதுநோக்கு மண்டபத்தில் கிராம அமைப்பு தலைவர் மா.தனபாலசிங்கம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பெருமளவான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.