ஈரான் – அமெரிக்கா இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

0
9

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் பலமுறை எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதேபோல் ஈரானும் அணு ஆயுத தயாரிப்பு தொடரப்படும் என்று எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 12ஆம் திகதி ஓமன் தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ரோம் நகரில் நடைபெறும் என்று இத்தாலி தெரிவித்துள்ளது.

ஆனால் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் 2ஆவது சுற்றுப்பேச்சுக்கான இடத்தை உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.