23 C
Colombo
Saturday, December 3, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஈ.பி.டி.பி யின் தலைமை அலுவலக மின் இணைப்பு துண்டிப்பு!

மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில்,  யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகமே இருளில் மூழ்கி இருக்கின்றது.

இதுதொடர்பாக தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மினசார சபை ஊழியர் ஒருவர்,

2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஸ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவருமாக விளங்கி வருகின்ற  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாது இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார் .

அண்மையில்  சுன்னாகத்தில் இயங்கும் தேசியக் கட்சியை சேர்ந்த  எம்பி ஒருவருக்கு சொநனதமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மின் இணைப்பை மின்சார சபை ஊழியர்கள் துண்டித்த போது, தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திய குறித்த பிரமுகர்,  ஒரு மணி நேர இடைவெளியில் மின் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொண்டமை, தொடர்பில் பத்திரிகைகளில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில்  தற்பொழுது செல்வாக்கு மிகுந்த தலைவராகவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஈ.பி.டி.பி. வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவருவதாவது,

 1990 ல் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் இராணுவத்தினரால்  விடுவிக்கும் வரை ஶ்ரீதர் அரங்கு புலிகள் திரையரங்காக செயல்பட்டிருந்ததுடன் புலிகளின் பாவனையில் இருந்துள்ளது.

பின்னர் படையினரின் பாவனையில் இருந்த நிலையிலேயே ஈபிடிபியினரினால் பொறுபேற்கப்பட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது.

அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் சுற்றிவர மின்சாரம் வழங்கப்பட்டு நாகவிகாரை உட்பட அயலில் உள்ளவர்களுக்கும் இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் மினசாரப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், மின்மாணி வாசிப்பு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், 2014 ஆண்டு புதிய மின் மாணி பொருத்தப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் மின் கட்டணம் சீராக செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும், 2014 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட நிலைவைத் தொகை மற்றும் அதற்கான அபராதத் தொகை போன்றவையே தற்போது மின் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் என்றும் தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்!

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில்...

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக...