31 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

உடனடி மறுசீரமைப்பு தேவை?

அதிகரித்துச் செல்லும் பொருளாதார நெருக்கடிகள், நாட்டின் அனைத்து கட்டமைப்புக்களையும் சீர்குலைத்துவிட்டன. எரிசக்தி அமைச்சர், பெற்றோலுக்
காக, மூன்று நாட்கள் வரிசையில் நிற்கவேண்டாமென்று அறி வித்திருந்தார். ஆனால், மக்கள் முன்னரைவிடவும் அதிகமாக வரிசையில் முட்டி மோதிக் கொண் டிருக்கின்றனர். ஓர் இரவு முழுவதும் வீதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டி
ருக்கின்றன. இதனால், போக்கு வரத்துக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. அமைச்சரின் அறிவிப்புக்கு அமைய, விடயங்கள் இடம்பெறவில்லை. ஏனெனில்,
மூன்று நாட்கள் வரிசையில் நிற்க வேண்டாமென்று கூறிய பின்னரும் கூட, நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது.
பெற்றோல் நிலையத்தில் பணிபுரிபவர்கள் தகவல்களை வழங்க, அதற்கேற்ப மக்கள் முதல் நாளே, வரிசையில் இடம்பிடிப்பதற்காக முட்டி மோதுகின்றனர். இதேபோன்றுதான், மண்ணெண்ணெய் விடயமும். கிராம சேவையாளர்களின்
மூலம் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுக்களுக்கு அமையவே மண்ணெண்ணெய்
வழங்கப்படுகின்றது. ஆனால், ஒருவருக்கு எத்தனை முறைகள் வழங்கப்படுவது என்பதற்கு எவ்வித வரையறையும் இல்லை. முதல்நாள் பெற்றவர் மறுதினமும் முன்வரி சையில் நின்று எண்ணெய் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெயை ஒவ்வொருவரும் வீடுகளில் சேகரிக்கின்றனர். இதன் காரணமாகவே பெற்றோலுக்கான வரிசை தொடர்ந்தும்
நீண்டுகொண்டே செல்கின்றது. பாரிய பற்றாக்குறை வந்து விடும் என்னும்
அச்சத்தின் காரணமாக, எரிபொருட்களை சேகரிக்கும் பழக்கமொன்று உருவாகி
விட்டது. இதன் காரணமாக தேவையுள்ள பலரால் எரிபொருளை பெறமுடியாமல்
இருக்கின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த, முகாமை செய்ய எந்தவோர் ஒழுங்கும்
அரசாங்கத்திடம் இல்லை. இது ஒரு பெரும் பிரச்னை. அதே வேளை, இந்த சந்தர்ப்
பத்தை பயன்படுத்திக் கொண்டு, சிலர் இதனை ஒரு வியாபாரமாகச் செய்யும் சூழ
லும் உருவாகியிருக்கின்றது.
இதேபோன்று பொருட்களை விற்பனை செய்வதிலும் ஒழுங்குகள் பின்பற்றப் படவில்லை. அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்திருப்பதாக
அறிவித்திருக்கின்றது. ஆனால், நடை முறையில் அதனை காணவில்லை.
கடைக்காரர்களோ, அந்த விலைக்கு எங்களுக்கு அரிசி வழங்கப்படவில்லையே
பின்னர் எவ்வாறு நாங்கள் அரிசியை, அரசாங்கம் கூறும் விலைக்கு விற்க
முடியுமென்று கேட்கின் றனர். மொத்தத்தில், அரசாங்கம் கூறுகின்ற எந்தவொரு
விடயமும் நடைமுறையில் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் சொல்லுக்கு
மரியாதை இருப்பதாகவும் தெரியவில்லை. மாவட்ட ரீதியில் இவற்றை
மேற்பார்வை செய்ய வேண்டியவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.
எரிபொருட்களை விநியோகிப்பதற்கு ஒரு சரியான பொறிமுறை அவசியம்.
இல்லாவிட்டால், இந்த பிரச்னையை ஒருபோதுமே கையாள முடியாது. எரிபொருள்
குறித்த நிலையத்துக்கு வரப் போகின்றதென்னும் தகவல் வெளியாகியவுடன்,
மக்கள் அலை மோதுகின்றனர். பெற்றோல், மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு
சரியான, அதே வேளை, அனை வருக்கும் பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்தக்
கூடிய வகையிலான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி
ஆரம்ப நாட்களில் தான் வித்தியாசமானதொரு ஜனாதிபதியென்று காண்பிக்கும்
நோக்கில், அலுவலகங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
அலுவலகங்களில் இடம்பெறும் தவறுகளை ஆராய்ந்து, நடவடிக்கைகளை எடுக்க
முற்படுவதான தோற்றமொன்றை காண்பித்திருந்தார். ஆனால், இப்போது,
அரசாங்கம் கூறும் எந்தவொரு விடயமும் நடைமுறையில் இடம்பெறவில்லை.
எந்தவொரு நிர்வாக கட்டமைப்பும் ஒழுங்காக செய்யப்படவில்லை. முதலில் இந்த
விடயங்களை அரசாங்கம் சரிசெய்ய வேண்டும்.
அமைச்சு ஒரு விடயத்தை அறிவித்தால், அதற்கேற்ப விடயங்கள் இடம்பெற
வேண்டும். பாடசாலை விடயத்திலும் முறையான நடைமுறைகள் இல்லை. ஒரு
பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்படுகின்றது. மறு பகுதிகளில்
பாடசாலைகள் இடம்பெறுகின்றன. அதே வேளை, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள்
இந்த வாரம் சமுகமளிப்பது கட்டாயமானதல்ல என்றும் அமைச்சர் கூறுகின்றார்.
ஆனால், மாவட்ட மற்றும் மாகாண மட்ட கல்வியதிகாரிகளோ, தங்களின்
தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
அதேவேளை, ஆசிரியர் ஒருவர், பெற்றோல் நிலையத்தில் நிற்பதாகக் கூறிவிட்டு,
வீட்டில் இருக்கக் கூடிய சூழலும் காணப்படுகின்றது.
ஒன்றில், நிலைமைகள் சரிவரும் வரையில், இணைய வழிக் கல்வி
முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட
நாட்கள் மட்டும் – என்னும் அடிப்படையில் பாடசாலைகளை நடத்த வேண்டும்.
விடயங்களில் ஒழுங்குமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களும்,
இந்த அடிப்படையில் விடயங்களை நோக்குவதாகத் தெரியவில்லை. உண்மையில்,
அனைத்துமே குழம்பிக் கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடி, அரசியல்
நெருக்கடியாக உருமாறியது. இப்போது, ஒட்டுமொத்த அரச நிர்வாக கட்டமைப்
புக்களும் சீர்குலைந்துவிட்டன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், விரைவில்
தடியெடுத்தவரெல்லாம் தண்டல்காரரென்னும் நிலைமையொன்று உருவாகலாம்.
அனைத்துமே கட்டுப்பாட்டை இழக்கலாம்.

Related Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...