24 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

உடற்குறைபாடு கற்றலுக்குத்தடையில்லை: மாணவனுக்கு குவிகிறது பாராட்டுக்கள்

சாதனைகள் பல்வேறு வகையில், நிகழ்த்தப்பட்டாலும், விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது பல்வேறு தளங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160புள்ளிகளைப்பெற்று
பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார்.
செங்கலடியினை சேர்ந்த குபேந்திரன்-கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன றினோபனிற்கு பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் இரண்டு கைகளும் தொழிற்பாடு குறைந்த நிலையிலேயே இருந்துவந்துள்ளது.
ஆனாலும் குறித்த மாணவன் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளில் திறமையான மாணவனாகயிருந்துவந்த நிலையில், வெளியான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று, பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப்
பெற்றதோடு, கற்றலுக்கு உடற்குறைபாடுகள் ஒரு போதும் தடையாகாது என்பதையும் நிருபித்துள்ளார்.
பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ள றினோபன் எதிர்காலத்தில் தான்ஒரு பொறியியலாளராக ஆக வேண்டும் என்பதே இலட்சியம் எனவும்
தெரிவித்தார்

Related Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம வைத்தியசாலையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளர்கள், வைத்தியர்கள் அவதி

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...