30 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உணவு ஒவ்வாமையினால் டிக்டொக் ஊழியர்கள் பாதிப்பு

 சிங்கப்பூர் டிக்டொக் அலுவலகத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, 60 பேருக்கு உணவு ஒவ்வாமையினால் இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பதினேழு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

பைட் டான்ஸ் அலுவலகங்களில் உணவு சமைக்கப்படுவதில்லை எனவும், வெளியிலிருந்து உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கின்றோம்.

 உணவு வழங்குனர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) நகர-மாநில சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு சீன தொழில்முனைவோரால் பைட் டான்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட டூயின் (Douyin) என்ற சிறிய வீடியோ செயலி வெற்றி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக ஒரு வருடம் கழித்து டூயின் செயலியின் சர்வதே பதிப்பாக டிக்டொக் செயலியை அறிமுகப்படுத்தியது. அதேவேளை சீனாவில் பயன்பாட்டில் இல்லாத டிக்டொக் செயலி உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டொக் செயலியின் தலைமையகங்களை சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles