உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் காணாமல் போன விசாரணை அறிக்கைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் விடயத்தில் நாம் தலையீட்டை மேற்கொண்டுள்ளோம். அந்த விசாரணை ஊடாக குறித்த பரிசோதனை அறிக்கைகள் எவ்வாறு மாயமானது என்ற விடயம் குறித்தும் நாம் ஆராயவுள்ளோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாம் விசேடகுழுவை அமைத்துள்ளோம். அதன் ஊடாக ஆணைக்குழுக்களின் அறிகைகள் காணாமல் போயுள்ளதாயின் அவை பற்றியும் விசாரிக்கப்படும். இந்த விசாரணைகளுக்காக ஓய்வூதியம் பெற்று சென்றுள்ள உரிய விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் பெறப்படும்.