உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில், யாழில் இன்று நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
‘தடைகளை உடைத்தல் இடைவெளிகளைக் குறைத்தல்’ எனும் தொனிப்பொருளில்
யாழ் போதனா வைத்தியசாலை முன்பாகவிருந்து ஆரம்பித்திருந்த நடைபயணம், ஆஸ்பத்திரி ஊடாக நல்லூர் ஆலய வீதியை சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் வைத்தியாலையை சென்றடைந்தது.
நடைபயணத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.