பொதுமக்கள் தமது உளநலப் பாதிப்புக்கள் மற்றும் உளநலம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு 1926 என்ற தொலைபேசி இலக்கம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அண்மைக்காலமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே இவ் விசேட தொலைபேசி
இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசி இலக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிமுகக் கலந்துரையாடல், அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில்
இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர்.ஆர்.முரளீஸ்வரன், புதிய செயற்றிட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.