உத்தேச உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலத்தில் உள்ள விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இதன்படி, உத்தேச சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக முன்மொழியப்பட்ட உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலம் ஜூலை மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.இருப்பினும், அதை எதிர்த்து இரண்டு ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து, உச்ச நீதிமன்ற பெஞ்ச், சபாநாயகருக்கு உத்தரவிட்டது.