இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வக் கோரிக்கை தொடர்பாகஇ கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவினைக் கோரிஇ இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நேற்று (05) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்திற்குச் சென்ற சி.வி.கே. சிவஞானம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யின் ஊடாக 35 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.