இன்று இரவு 6 .55 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியான தகவலின் படி இன்றைய தினம் 211 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிய முடிகிறது.
இதில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 09 பேரும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் 202 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.