எதிர்வரும் ஏப்ரலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்!

0
33

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைத்துள்ளது.

அது விரைவில் சபையில் அறிவிக்கப்படும்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.